நம் நட்பின் வழிவந்த என் காதல்
உன் நண்பனாய்
இருந்த என்னை
உன் அன்பிற்கு அடிமையாக்கினாய்.... அடிப்பணிந்து கிடந்த
என் மனதை
களவு கொண்டாய்....
எப்படி வந்ததென்று
தெரியவில்லை...?
உன்னுடன் காதல்.... வருணிக்கவும்
முடியவில்லை....
அதை உன்னிடம்
நான் சொல்ல
நான் பட்ட
கஷ்டங்கள்
சொல்லி தீராது....
நம் நட்பிற்க்கு
நான் சொய்தது
பாவமா..?
இல்லை இல்லை
நம் நட்பின்
வழி வந்த
என் காதலிலும்
நாம் நட்பு தான்
முதலிடத்தில் உள்ளது....
கவி பல சேகரித்து
விழி வழியே
என் காதலை
உன்னிடம் பகிர்ந்துகொண்ட
நாள் இன்று....
என் இதய குழியில்
என்றும் வாசனையோடு நினைவிருக்கும்.