இரு வழிப்பாதைகள்
செல்லும் இடமோ
வெகுதூரம்
விரைந்து செல்கிறது
ஒரு முடிவற்ற
பாதை...
உனக்கு
எத்தனை காவலாளிகள்
வழியெங்கும்
ஆலமரங்கள் உன்னை
வரவேர்கின்றதே...!
நெடு தூரம்
செல்லும் எனக்கு
சுகமான நித்திரையும்
தருகிறாய் சுகத்தையும்
கொடுக்கிறாய்...
கண்விளித்தாலோ
எதிரே பள்ளி குழந்தைகளின்
அணிவகுப்பு பார்க்கும்
எனக்கு மகிழ்ச்சியை
தருகிறதே..!
உன்னிடம்
அரங்கேற்றம் செய்யாமல்
எந்த வாகனமும்
உன்னை
கடந்ததில்லையே..!
இரவு வந்துவிட்டாலோ
உன்னை அலங்கரிக்க
மின் விளக்குகள்
மின்ன
தொடங்குகிறதே..!
அதிவேகத்தை
நீ நேசிக்கிறாய்
உனது சுயநலம் தெரியாமல்
விபத்தை சந்திக்கும்
அப்பாவி மக்களை
என்னவென்பது...!
இரு வழிப்பாதையே
நீ இருளை அகற்றிவிடு...
உன்னை நாடி
வரும் மக்களுக்கு நல்வழி
காட்டிவிடு...