புதுக்கவிதைகள்

என்னுள்ளே தோன்றி என்னுள்ளே
அழிந்து கிடக்கும் கவிதைகள் எத்தனை
எத்தனையோ எனக்கே தெரியாமல்.............!

நினைவில் உள்ளதை எழுதி கொண்டு இருக்கிறேன்
நினைவில் இல்லாததை தேடி கொண்டுதான் இருக்கிறேன்...................!

அம்மாவாசை இரவில் நிலவை தேடிடும்
ஒரு குழந்தையை போல நானும்........!

அழிந்த கவிதைகளை மீண்டும் எழுதி விடுவேன்
என்ற நம்பிக்கையில்
இன்று வரை நானும் எழுதி கொண்டுதான் இருக்கிறேன் எல்லாமே புதுக்கவிதைகளாய் ......!

எழுதியவர் : சு.சங்கத்தமிழன் (8-Jan-14, 8:14 pm)
சேர்த்தது : சு சங்கத்தமிழன்
பார்வை : 547

மேலே