எதார்த்தம்
பரபரப்பாய் பேருந்து நிறுத்தம் நோக்கி ஓடிய கும்பலில் சாரதியும் ஒருவன். இரு பேருந்து கூட்டம் ஒரே பேருந்தில் வந்தாலும் அடுத்த பேருந்தில் ஏறிடணும் என்பதில் தீர்மானமாய் இருந்தான். முண்டி அடித்து ஏறினான் கூட்டம் நிரம்பி வழிந்த வண்டியில். தடுமாறி விழ போனவனை தாங்கி பிடித்தது ஒரு அழகிய கை. கைக்குரிய பெண்ணை பார்த்தவனுக்கு வந்தது முதல் பார்வையில் காதல். அழகை விழுங்கிய வண்ணம் ஓராயிரம் கனவுகளோடு இருந்தவன் சட்டென சோகமானான். அந்த பெண் நிறுத்தத்தில் இறங்கி கொண்டிருந்தாள். இவனும் இறங்கிவிட்டான். இறங்கியவள் துப்பட்டாவை சரி செய்தவாறே மறைத்து பின் போட்டிருந்த தாலியை எடுத்து விட்டவாறு வேக நடை போட்டாள். இவனுக்கோ தூக்கி வாரி போட்டது.