பிச்சைக்காரன் தத்துவம்

ஏந்திய ஓட்டினில்
நிக்கல் காசினைப் போட்டேன்
இறைவன் உனக்கு
எல்லாம் தருவான்
என்றான் பிச்சைக்காரன்

உனக்கு ஏன் இறைவன்
எல்லாம் தரக்கூடாது
என்றேன் நான்

எல்லாம் வல்ல இறைவன் அருளால்
எல்லோரும் தருகிறார்கள்
வாழ்கிறேன்
இடும் கரம் ஒவ்வொன்றிலும்
இறைவன் அருளைக்
காண்கிறேன் என்றான்

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (10-Jan-14, 9:54 pm)
பார்வை : 828

மேலே