சொர்க்கவாசல் திறக்கப் படுகிறது - அனைவருக்கும் வைகுண்ட ஏகாதசி வாழ்த்துக்கள்
சுத்தமான நினைவு இருந்தால்
சொர்க்க வாசல் - சொல்லில் இருக்கு
சொல்லும் சொல்லில் தமிழ் இருந்தால்
சொர்க்க வாசல் - செவியில் இருக்கு.
செவி வழியே செந்தமிழ் நுழைய
சொர்க்கவாசல் - இதயத்தில் இருக்கு - மனம்
இனிக்க நுழைந்து வெளியேறுவதே
சொர்க்க வாசல் - என்று சொன்னால் - மன
விழி திறக்கும் காட்சியெல்லாம்
சொர்க்க வாசல் - என்று சொல்வேன் - இதோ
வாய் திறந்து மலர்ச் சிரிப்பு......!
சொர்க்க வாசல் - மிக அழகு - இதோ
வாய்மையான வாழ்க்கை முறை..... !
சொர்க்க வாசல் - மிக நேர்த்தி - இதோ
வாழ்த்துகின்ற நெஞ்சங்கள்....... !
சொர்க்க வாசல் - தென்றலின் வரவேற்பறை...!
ஆனந்த ஆன்மாவின் கதவுகளை திறந்திடுங்கள்
சொர்க்கவாசல் - வழியே ஆண்டவன் நுழையட்டும்
கற்களால் கட்டப் பட்டது அல்ல
சொர்க்கவாசல் - அது கருணையால் கட்டப் பட்டது
அம்மாவின் அன்பு மொழி அந்த
சொர்க்கவாசல் - வாயில் தோரணம்....!
அப்பாவின் அறிவுரை அறிவெனும்
சொர்க்கவாசல் - திறக்கும் கதவு......!
சகோதர பாசம் அனைத்தும் அந்த
சொர்க்கவாசல் - நடைப்பாதை கோலம்...!
தாத்தாபாட்டி சொல்லும் கதைகள்
சொக்கவாசல் - கைப்பிடி வகைகள்....!
நண்பர்களின் பண்புரையாடல்கள் யாவும்
சொர்க்கவாசல் - பக்தி கோஷம்....!
உறவுகளின் நல்லெண்ணம் எல்லாம்
சொர்க்கவாசல் வழி - இப்போதே முக்தி நிலை...!
இறைவனே வா - திறந்து விட்டோம்
சொர்க்கவாசல்....!
முக்தி உனக்கும் உண்டு
நிச்சயம் இனி நீ மனிதன்தான்......!
..