என் உயிரினும் உயிரான-2
ராகவியும் சந்தியாவும் கல்லூரிக்குள் நுழைகின்றனர் ..தனக்கே உரிய பதட்டத்தோடும் பயத்தோடும் இருந்த ராகவிக்கு ஆறுதல் கூறினாள் சந்தியா "ஏன் ராகவி பயப்படுகிறாய் இது நாம் கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் நாள் ..நம் கனவு பலிக்க போகும் இன்றைய தினம் நீ சந்தோசமாக மட்டும்தான் இருக்க வேண்டும் ..உனக்காக நான் இருக்கிறேன் அல்லவா என்று தன் தோழியின் கரம் பற்றினாள் சந்தியா..
ராகவி ,"ஒன்றும் இல்லை சந்தியா முதல் நாள் அல்லவா அந்த பயம்தான் வேறு எதுவும் இல்லை .வா நாம் Classroom -ஐ தேடலாம் என்று இருவரும் நடந்தனர் "
ஹே நில்லுங்கள் என்று பின்புறத்திலிருந்து ஒரு குரல் ..இருவரும் ஒருமித்து திரும்பினர் அங்கே 5 மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர் ..
இவர்கள் யார் ..ஏன் நம்மை அழைகிறார்கள் என்று யோசித்தவண்ணம் தயங்கினர் தோழிகள் இருவரும்.
அவர்களில் ஒருவன் பேச ஆரம்பித்தான் "ஹலோ juniors என்ன கல்லூரிக்கு வரும்பொழுது seniorsku மரியாதை அளிக்க வேண்டும் என்று தெரியாதா..Come Here என்று அழைத்தான் ..
என்ன செய்வது என்று யோசித்தவாரே இருவரும் அவர்கள் பக்கம் சென்றனர் .சந்தியா பதில் கூறுவதற்கு முற்பட்டபோது ராகவி அவளை பார்த்து கண் அசைத்தாள்..எனக்காக அமைதியாக இரு ..என்று அந்த அசைவின் அர்த்தம் புரிந்தவளாய் சந்தியா அமைதி காத்தாள் சந்தியா ..ராகவிக்கு தெரியும் சந்தியா எதையும் வெடுகென்று பேசி விடுவாள் என்று அதனால்தான் அவளை அமைதி காக்க கூறினாள் ..
என்ன பதிலை காணோம் என்று கேட்டான் ஒருவன் ..
ராகவி தன் மெல்லிய குரலில் "வணக்கம் அண்ணா ..எங்களை மன்னித்து விடுங்கள் ..என் பெயர் ராகவி இது என் தோழி சந்தியா நாங்கள் இருவரும் இங்கு BE CSE பிரிவில் முதலாம் ஆண்டு சேர்ந்து இருக்கிறோம் என்றாள்..
ஏன் நீ மட்டும்தான் பதில் அளிப்பாயா..இவளுக்கு பேச தெரியாதா என்றான் சந்தியாவை காட்டி ..
பொறுமை இழந்த சந்தியா "உங்களுக்கு தேவை பதில் அதை அவள் கூறி விட்டாள் அல்லவா ..நாங்கள் வகுப்பிற்கு செல்கிறோம் என்று முற்பட்டாள்.
அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் "அவளை பார்த்து சற்று பொறுமையாக இரு என் நண்பன் வந்தபிறகுதான் நீங்கள் செல்ல முடியும் " என்றான் ..
தோழிகள் இருவரும் யார் அவன் ..நாம் ஏன் அவனுக்காக காத்திருக்க வேண்டும் என்று மனதில் யோசித்தவாரே வேறு வழி இல்லை என்று காத்திருந்தனர் அந்த முகம் தெரியாத நபருக்காக..
நாமும் காத்திருப்போம் ....