இனிப்பார் தமிழினம் ஒன்றுபடும்

மனித இனத்தில் தனி இனம் ,
மானத்தோடு வாழ்வது நம்மினம் ,
வீரம் விளையும் பழைய இனம்,
வீழ்ந்தாலும் விளையும் நம்மினம்,

நேர்மை குணத்தை நெஞ்சினில் தாங்கி,
நிறைய அடிகள் உடலில் வாங்கி,
நிறமும் குணமும் மாறாமல்,
நின்று போரிடும் வீர இனம்,

சூழ்ச்சி வலையில் பிடிக்கப்பட்டு,
சுந்தரத் தமிழினம் பிரிக்கப் பட்டு,
குருதியில் தள்ளி அடித்தாலும்,
கண்ணைப் பிடுங்கி எடுத்தாலும்,
குறுகிடாது நம் இனம்.

வேர்கள் ஒன்றாய் இருந்தாலும்,
கிளைகள் பலவாய் பிரிந்துள்ளோம் ,
பிரிந்து நாம் உள்ளவரை ,
பின்னால் நரிகள் குதறப் பார்க்கும்.

ஒன்றாய்க் கூடி வாழ்த்திடவே,
நம் ஒற்றுமை உலகம் கண்டிடவே,
புதுப்பானை பொங்கலிடு,
புறப்பட்டு தமிழா !முடிவை எடு...!

---கொங்குதும்பி.
11 சனவரி 2014

எழுதியவர் : kongu thumbi (11-Jan-14, 4:23 pm)
பார்வை : 64

மேலே