கேள்வியும் நானே பதிலும் நானே

உயிர் அற்றவை எது ?
உலகில் மண்ணும் மலையும் என்றால்
உயிர் அன்றி செடியின்விதை மண்ணில் உயிர் பெருமா!

எது அசைவம் ?
மண்ணில் பிறக்கும் உயிர்களை
கொன்று தின்பது அசைவம் என்றால்
காய்களுக்கு உயிர் இல்லையா
கரு இன்றி ஜனிக்குமா!
உனக்கென இறைவன் படைத்ததை
உண்டால் அது சைவம் ....
மற்றவர்களுக்கு படைத்ததை
தின்றால் அது அசைவம்

கடலுக்கு உயிராக துடிக்கும் அலைகளை
காண்பாயோ !
இயற்கைகளுக்கு உயிர் உண்டு
அதை அறியும் திறன் மனிதனுக்கில்லை !!

மனிதனிடம் நம்பிக்கை இழக்கும் போது
இயற்கையை நேசிக்கிறான்
ஆசைகள் பிறந்ததால்
இயற்கையை அழிக்கிறான்!!

அவனுக்காக தான் இயற்கை
படைக்க பட்டது என்பதறியாமலே !!

எழுதியவர் : kanagarathinam (14-Jan-14, 1:15 am)
பார்வை : 98

மேலே