மனைவியான காதலியே உன்னை வாழ்த்தி பாடுகிறேன்

கன்னி உன் மீது கண்ணை வைத்து
காகிதத்தில் எழுத்தை உதிர்த்தேன்
கவிதை ஒன்று உருவானது

மங்கை உந்தன் வழிகளெல்லாம்
காத்து காத்து கடந்து சென்றேன்
காதல் ஒன்று உருவானது

அன்பே நீயும் அன்பை பொழிய
வம்பாய் வந்து மாட்டிகொண்டேன்
வாழ்க்கை ஒன்று உருவானது

தேனே நீயும் தித்திதிடவே
வானாய் நின்று வதத்தை செய்தேன்
மகனாய் ஒன்று உருவானது

உயிரே உனக்கு பரிசாய் தரவே
என்னில் உயிர் தான் மிச்சம்
அது தான் அதற்கு சரியானது

எழுதியவர் : பெருமாள் (20-Jan-14, 8:22 pm)
Tanglish : manaivi
பார்வை : 206

மேலே