கிழட்டுக் காதல்

அப்பா.... பிளீஸ் ! என்னால இதை ஏத்துக்கவே முடியாது ! பொறுமையாய் தன் மனதின் ஆதங்கத்தை அவன் தந்தை மாரிமுத்துவிடம் சொன்னான் மானவ்.

ஏம்பா முடியாதுன்னு சொல்றே ? நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்லே... தயங்காமே சொல்லு பரவாலே.... மாரிமுத்துவும் அவர் மகனை விடுவதாய் இல்லை.

அப்படிலாம் ஒன்னும் இல்லப்பா.... ஆனா, இது சரியா வரும்னு எனக்கு படலே... அவ்ளோதான் ! அப்படி உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்த ஏன் தனியா இருக்கணும் ? இங்கையே வந்து தங்கிடலாமே...

மகனின் கரிசனமான பேச்சு மனதைத் தொட்டாலும் தனியாகவே இருந்து பழக்கப் பட்ட கட்டையாயிற்றே எப்படி அவ்வளவு சீக்கிரத்தில் தனது முடிவை மாற்றிக் கொள்ள முடியும் என்பது மாரிமுத்துவுக்கும் தெரியும்.

ஆமாபா.... எங்கக் கூடயே வந்து தங்கலாமே ? ஏன் தயங்கரீங்க ?

மருமகளும் 6 மாதக் குழைந்தையை மெத்தையில் படுக்க வைத்து முதுகை மெல்லமாய் தட்டியவாறே கேட்டாள்.

மகன் மருமகள் இருவருக்கும் மாரிமுத்துவின் முடிவில் துளியும் விருப்பமில்லை என்பது அவர்களின் பேச்சிலிருந்தே லேசாய் அவருக்கு புரிந்தது.

இங்கப் பாரு மானவ்... இது தான் என் முடிவு நான் ரொம்ப உறுதியா இருக்கேன். என் முடிவில் எந்த மாற்றமும் நான் செய்ய விரும்பல...

என்றுச் சொல்லி கிளம்ப ஆயோத்தமான தன் அப்பாவை தடுத்து நிறுத்தினான் மானவ்.

அப்பா... தயவு செஞ்சி கொஞ்சம் யோசிச்சி பாருங்க.... இது எத்துக்கப்படர விசியம் இல்லே... ஊர் உலகம் என்ன சொல்லும்.... இதலாம் நீங்க யோசிக்க மாட்டிங்களா... ??

உணர்ச்சிப் பொங்க அனல் பறக்கும் தன் மகனின் வார்த்தைகளைக் கேட்டு கொஞ்சமும் தளராமல் திடமான கல்லாய் நின்றுக் கொண்டிருந்தார் மாரிமுத்து. மானவ்வின் மனைவி பிரித்திகா கொஞ்சம் ஆடிப் போய் இருவருக்கும் வாக்குவாதம் வந்துவிடும் என்று பயந்து மானவ்வின் அருகில் போய் நின்றவாறே அவனது முதுகை லேசாய் அமைதியாய் இருக்கும் படி தட்டி விட்டவாறே நின்றாள்.

மானவ்... நான் ஒரு தகப்பனா உனுக்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் சரியா செய்திட்டேனு நினைக்கறேன். உங்க அம்மா... என் மனைவி... அந்த புண்ணியவதி நம்பள விட்டுப் போனது என்னைவிட உனக்கு தான் அதிகமான வலி. ஏன்னா... அவள் உன்னப் பெத்தவ. உங்க தொப்புள் கொடி பந்தம் எங்க கணவன் மனைவி உறவை விடவும் ரொம்ப ஆழமானது. அதனாலே நான் இப்போ அதப் பத்தி பேச விரும்பலே. உன் அம்மா இருந்த இடத்துக்கு இன்னொரு பெண் வராத உன்னால ஏத்துக்க முடியலே அதுதான் இப்படிலாம் காரணம் சொல்ற. அவளோட நிரந்தரப் பிரவு ஈடுகட்ட முடியாத ஒரு இழப்புதான். அந்த இழப்ப ஈடுகட்ட முடியாட்டியும்... ஈடுகட்ட முடியாதுதான். ஆனா, இப்போதைக்கு மனைவி குழந்தை இப்படின்னு பல உறவுகள் உன்ன சுற்றி இருக்குது.

ஆனா, என்னப் பாறேன் தனி மரம். எங்கப் போனாலும் அவ... அதான் உங்க அம்மா அவ நெனைப்பு மனச விட்டு அகல மாட்டுது. நீங்க சின்னஞ் சிறுசுங்க உங்க கூட வந்து தங்கறது அவ்வளவு நாகரிகம் இல்லே. தனிமை ரொம்ப கொடுமையா இருக்கு. இருக்கப் போறது இன்னும் கொஞ்சம் காலம் தான். அதுல ஒரு துணை மனசுக்கு ஆறுதலாய் இருந்தா ரொம்ப நிம்மதியா இருக்கும்.

வாயிக்கு ருசியா சமைச்சி போட்டு, துணியெல்லாம் வெளுத்து போட்டு அவ என்ன நல்லாப் பார்த்த காலத்துல அவ அருமே எனக்கு தெரியலே... இப்போ தனியா இருக்கும் போது சத்தம் போடாமே அழறேன்... அதான் சொல்லுவாங்களே நிழலின் அருமை வெயிலில் தெரியும்னு அது எனக்கு நல்லாப் பொருந்தும் போ...

தன் அப்பா மாரிமுத்து அவர் மனதின் சோகச் சுமைகளை கொட்டிக் கொண்டிருக்கிறார் என்று மானவ்வினால் புரிந்துக் கொண்டாலும் அவரது முடிவுக்கு அவன் செவி சாய்க்க நன்றாய் யோசிக்க வேண்டியிருந்தது. மன பாரத்தை இறக்கிய தெம்பினில் தன் வாடகை வீட்டை நோக்கி புறப்பட்டார். மகனும் மருமகளும் யோசிக்கும் வரை அவருக்கு பொறுமையில்லை.

மானவ் அவன் மனைவி பிரித்திகாவை பார்க்க கூச்சப்பட்டான் முதன் முதலாக. அவன் தந்தை மாரிமுத்து தவறான முடிவொன்று எடுத்து தன்னை தன் மனைவியின் முன் தலைக்குனியும் படி செய்து விட்டார் என மிகவும் வருந்தினான். அவன் இப்படி உடைந்துப் போய் இருப்பது இதுவே முதல் தரமும் கூட. இப்பிரச்சனைக்கு இன்றே இப்போதே ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று தீர்மானித்தாள் பிரித்திகா.அவனின் இந்நிலையைக் காண மாட்டாது அவள் பேச ஆரம்பித்தாள்.

என்னங்க... ஒருக் கால் நான் இல்லாமல் போயிட்டா நீங்க எண்ணப் பண்ணுவீங்க ?

வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதுப் போல் இவளது கேள்வி அவனுக்கு நறுக்கென்றது.

என்னடி கேள்வி இது... ? சலித்துக் கொண்டே கேட்டான்.

சொல்லுங்கங்க நீங்க என்னப் பண்ணுவீங்க ? இன்னொரு கல்யாணத்தப் பத்தி யோசிப்பீங்களா மாட்டிங்களா ?

இப்போ இந்தக் கேள்விலாம் ரொம்ப முக்கியமா ? வேறே வேலை இருந்தாப் போயி பாரு போ ! என்று கறாரான குரலில் சொன்னான்.

காரணம் இல்லாம நான் எதையும் பேசவும் மாட்டேன் கேக்கவும் மாட்டேன் அது உங்களுக்கே தெரியும். நீங்களே பதில் சொல்றது நல்லதுன்னு நான் நினைக்கறேன்... என்றாள் நமட்டு சிரிப்போடு.

விட மாட்டியே ! இன்னொரு கல்யாணம் யோசிக்கனும்மா.. நீ இருந்த மனசுட இது ! உன் மேலே வைச்சிருக்கற அதே அன்பு இன்னோர் ஆள் மேலையும் வராதே... அதுக் கஷ்டம்டா.. உருக்கத்தோடு சொன்னான் மானவ். சொல்லும் போதே அவனது குரல் தளுதளுத்தது.

அப்போ நம்ப குழந்தை ? அவனை எப்படி வளர்பீங்க ? அவனை வேலை இடத்துக்கே துக்கிட்டு போய்டுவிங்களா ? என்றுக் கேட்டு சிரித்தால்.

உங்க அம்மா விட்டுல விட்டிடுவேன் நம்ப பையன... அவுங்க நல்லா வளர்ப்பாங்க... என்று முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு சொன்னான் மானவ்.

அய்யய்யோ...சாமி... என்னாக் கூத்து இது ! எங்க அம்மாவை பார்க்கவே ஒரு ஆள் வேணும். அவுங்க நம்பப் பிள்ளைய பார்துக்கனுமா ? நல்லாக் இருக்கு போங்க கேட்க... அவுங்க என்ன சிறுவயசு குமரியா....? மடக்கினாள் மானவ்வை அவளின் பதிலினாள்.

இப்போ என்னாதான் உனக்கு வேணும் ? ஏன் இப்படி போட்டு படுத்தற ? ஒரு வேலை உனக்கு ஏதாச்சம் ஆயிட்ட நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம் பண்ணாமலும் இருக்கலாம் காரணம் வரப் போறவ நம்பப் பிள்ளையை சரியா கவனிச்சுப்பாளானு எனக்கு தெரியாது...அதனாலே அப்படி ஒரு நிர்பந்தம் ஏற்பட்ட இதப் பத்தி கண்டிப்பா உன் படத்துக்கு முன்னாடி பூ போட்டு பார்த்து நல்லா முடிவா எடுக்கறேன் சரியா ?!

பட படவென பட்டாசாய் வெடித்து தள்ளியவனை ஒருக் கணம் உற்று நோக்கினாள் பிரித்திகா.

ஒருக்குழந்தை அம்மாவோடு பாசாமும் ஆரவனைப்பும் இல்லாமல் வளரது ரொம்ப கஷ்டங்கறது உங்களுக்கு நல்லாவே தெரியுது. அப்படியே வளர்ந்து நல்ல பண்புள்ள ஒரு மனுஷனா வளராது ரொம்ப ரொம்ப கஷ்டம். ஆனா, நீங்க வளர்ந்திருக்கிங்க. வளர்க்கப்பட்டிருக்கீங்க...

அதுக்கு முழு காரணம் உங்க அப்பா. அவர் ஒரு கவிஞரா இருக்கலாம். அவரது பேச்சிலையும் எழுத்துலயும் உள் அர்த்தங்களும் இரண்டை அர்த்தங்களும் அதிகமாகவே இருக்கலாம். ஆனா, அவர் குணத்துல எல்லாமே சொக்க தங்கமாத்தான் இருந்தது.

அதனாலத்தான், உங்கள இப்படி ஒரு நல்ல மனுஷனா அவராலே வளர்க முடிஞ்சது. வாழ்றே காலம் எல்லாத்தையும் உங்கள சரியா முறைய வளர்கவே அவர் வாழ்ந்திருக்கிறாரு. அவரோட மொத்த இளமே காலத்தையும் உங்களுக்காகவே அர்பணிச்சிருக்காரு ! அவரப் பார்த்தா உங்களுக்கு இரக்காம இல்லையா ? தனக்குன்னு ஒரு வாழ்க்கைய இப்போதான் அவர் வாழ ஆசைப்படாரு. அதுவும் முதுமைல தன் எல்லாக் கடமைகளையும் செஞ்சி முடிச்சிட்ட மனத்திரிப்தியோடே. அதே ஏன் நாம தடுக்கணும் ?

உங்களுக்கே ஒரு அஞ்சு நிமிஷம் நான் இல்லனா உலகமே நிண்டிடும். பதினைஞ்சி வருஷமா அவரு உலகம் நின்னுகிட்டுத்தான் இருந்திருக்கு இப்போவாச்சம் கொஞ்சம் அழகா இருக்கட்டுமே. நந்தி மாதிரி நாம ஏன் அவர் சந்தோசத்துக்கு குறுக்க நிக்கணும் ?

பிரித்திகாவின் வார்த்தைகள் மானவ்வின் நெஞ்சைத் தொட்டன. அவன் கண் முன் தன் தந்தை மாரிமுத்து தனக்காக பாடுப்பட்ட காட்சிகள் நிழலாடின. முடிவில் அவனது கண்களில் கண்ணீர் பனித்தன.

மறுநாளே தன் தந்தை மாரிமுத்துவை பார்க்க சென்றான். அவரோடு அதே வீட்டில் இருந்தாள் அவனது புதுத் தாய் செண்பகவள்ளி. அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது தாலி. அவளைக் கண்டதும் பிரித்திகா வேகமாய் ஓடிச் சென்று அவளை அனைத்துக் கொண்டாள்.

இருவரும் சிரித்தவாறே அடுப்படிக்கு சென்றனர். மாரிமுத்து கையில் பத்திரிக்கையுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தார். மானவ் கையில் குழந்தையுடன் ஜன்னல் ஓரம் நின்றவாறே அவன் அப்பாவிடம் என்னப் பேசுவது எப்படி பேசுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

அந்நேரம் பார்த்து வீட்டின் முன் கார் சத்தம் கேட்டது. தாத்தா.... என் கதை பேப்பர்லே வந்திருக்கு என்று அலறிக் கொண்டே வீடினுள் வந்துப் புகுந்தாள் நிதர்ச்சலா.

அவள் தாத்தா என்று உரிமையோடு அழைக்கும் வழக்கம் முன்பு இருந்த தாமானில் இருவர் வீடும் பக்கம் பக்கம் இருந்ததால் வந்தது. சரி கூப்பிட்டு போனால் போகட்டும் இவளும் பேத்தி தானே. மானவ்வுக்கு சிக்கிரம் கல்யாணம் ஆகிருந்தால் இவள் வயதிலேயே பேத்தி இருந்திருப்பாளோ இதே துடுகுத்தனத்துடன் என்று மாரிமுத்து யோசித்ததும் உண்டு.

வீட்டில் வந்து புகுந்தவள் மானவ்வை பார்த்ததும் ஹாய் அண்ணா ! ஹேய் பாப்பா. குட்டி பையா இங்கப் பாரு அத்தை வந்திருக்கேன் என்று அவனைக் கொஞ்ச ஆரம்பித்தாள்.

உங்க தாத்தா கல்யாணம் பண்ணிட்டாரு தெரியுமா ? என்றான் மானவ் நித்ர்ச்சலாவிடம்.

அண்ணா... அவுங்கப் பேரு செண்பகவள்ளி. வயசு ஐம்பத்தி அஞ்சி. 'பைபாஸ்' செஞ்ச ஆளு. கணவர் இறந்து பத்து வருஷம் ஆகுது. அவரோடு 'பென்சன்' பணதுலத்தான் இவங்க பொழப்பு ஓடுது. குழந்தைகள் இல்லே. தனி ஆளு. நம்பத் தாத்தா மாதிரி. தாத்தாவோடு கவிதைகள்னா அவுங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

நெறைய படிப்பாங்க. தாத்தா தான் நம்ப ஆளாச்சே அதான் ஒரு நாள் ரெண்டு போரையும் அறிமுகம் பண்ணி வெச்சேன். வயசானக் காலத்துல ரெண்டு பெரும் அன்ப பரிமாற விருப்பப்பட்டாங்க. திருமண பந்தம் அதுக்கு சரியான ஒரு வழி. நான்தான்
உங்ககிட்டையும் அண்ணிகிட்டையும் இதப்பத்தி பேசச் சொன்னேன்.

அப்பவே நெனச்சேன் இந்த மாதிரி நாரதர் வேலையெல்லாம் கண்டிப்பா நீதான் பண்ணி இருப்பேன்னு ! பரவாலே... பொழச்சி போ மன்னிச்சி விட்டறேன்.... மானவ் அவளிடத்தில் சொன்னான்.

அதற்குள் மதிய உணவு தயாராகி பரிமாற்றத்திற்கு காத்திருந்தது. அனைவருக்கும் உணவை பரிமாறிக் கொண்டிருந்தாள் பிரித்திகா. தீடிரென்று, மானவ் சென்பகவள்ளியைப் பார்த்து,

அம்மா.... எனக்கு நீங்க பரிமாறீங்களா ? உங்களத்தாம்மா... இனிமே நீங்கத்தானே என் அம்மா.

அவனது வார்த்தைகள் சென்பகவள்ளியை மட்டுமின்றி அந்த உணவு மேஜையில் அமர்ந்திருந்த அனைவரது முகத்திலும் சந்தோசத்தை தாண்டவம் ஆட விட்டது.

எழுதியவர் : தீப்சந்தினி (22-Jan-14, 11:13 am)
பார்வை : 2070

மேலே