நம்பினால் நம்புங்கள்,

இருக்கும் போது யாருக்கும்
தெரியாத அவனே,
இறந்த பின் தெய்வமாகிறான்...!!
_
நமக்கு மிகவும் பிடித்த ஒன்று,
கிடைக்காத போது
பிடிக்காத ஒன்றாகி விடுகிறது...!!
_
அருவெறுப்பான கவர்ச்சி படத்தை மகனும்,தந்தையும்
ஒரே கோணத்திலே ரசிக்கின்றனர்...!!
_
கொலை செய்து சிறை சென்றவன் திரும்பி வந்ததும்,
மாபெரும் தலைவனாகிறான்....!!!
_
கொடியவன் என சித்தரிக்கப்பட்ட இராவணன்
கதை நாயகன் ஆனால்,
நல்லவன் ஆகி விடுகிறான்..!!
_
ஊர் கூடி செய்து வைத்த திருமணமே நன்றாக வாழாத போது,ஊர் கூடி சிரித்து பிரிக்கபடுகிறது...!!
_
நாம் பார்த்து ரசித்த நடிகர்,நடிகைகள் போலவே வாழ ஆசைப்பட்டு, ஒருநாள் வாழ்ந்து மறக்கிறோம்...!!
_
அவசர உலகில் அறிவை இழந்து,காட்சி பொருளை அதிசயம் என நம்பி
கண்ணிருந்தும் யானை தடவி பார்க்கிறோம்..!!
_
நம்பினால் நம்புங்கள்,
உண்மையல்லாத ஒன்றே உயிராகிறது,நம் உணர்ச்சிகளின் உச்சகட்டமே ஏமாற்றங்களின் பிறப்பிடமாகிறது..!!!

எழுதியவர் : Akramshaaa (26-Jan-14, 7:56 am)
பார்வை : 56

மேலே