பணத்தின் மதிப்பு
ஒரு ரயிலில் பிரயாணம் செய்த மூன்று பேர்கள் தங்கள் உடமைகளைத் திருடு கொடுத்துவிட்டுத் திகைத்து நின்றார்கள்.
கூடவே பயணம் செய்த தனவந்தர் ஒருவர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் மனமிரங்கி ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் தந்தார்.
உதவி பெற்றவர்களை பேட்டியெடுத்தபோது முதல் மனிதர் சொன்னார், "அவர் தகுதிக்கு ஐந்நூறு வெறும் ஐந்து ரூபாய்க்கு சமம்" என்றும், அடுத்தவர் ஐந்நுறு ரூபாய் கொடுத்து உதவிய அந்த தனவந்தர் , நல்ல மனிதர்" என்றும், மூன்றாம் மனிதர் " ஐந்நூறு ரூபாயா அது? அந்த நேரத்தில் அந்த பணம் ஐந்து லக்ஷத்திற்கு சமம்" என்றும் கூற்றினர்.
இதிலிருந்து என்ன தெரிகிறது. ஒரே உதவி ஒவ்வொருவருக்கும் ஏற்ப மதிப்பு கூடவோ குறையவோ செய்கிறது.
இது ரசிகமணி டி. கே.சி. கொன்ன கதை.
படித்ததில் ரசித்தது.