வேண்டும் நட்பு

இனத்தை தாண்டி சமமாய்
மதிக்கும் நட்பு வேண்டும்.
பாகுபாடு இல்லாது என்றும்
இயல்பாய் பழகிட வேண்டும்.
தொடுதல் இன்றி கருத்துகள்
பகிர்ந்திடல் வேண்டும்.
எங்கிருந்தாலும் என் நிலை
நீ உணர வேண்டும்.
இணைந்து வண்டாக
பறந்திட வேண்டும்.
வானையும் கடந்திட வேண்டும் -நம்
எண்ணத்தால் வானையும்
கடந்திட வேண்டும்.
போகும் இடமெல்லம்
வென்றிட வேண்டும்.
பிறருக்கு உதவிட வேண்டும்.
நல்லன பல செய்திட வேண்டும்.
என்றும் பிரியா நட்பு
என்னில் வேண்டும்.
நண்பா,-உன்னால் என்றும்
பிரியா நட்பு வேண்டும்.