நான் தான்
நான்தான்....
எனக்கான ஆசைகளுக்கு
உயிர்திரி ஏற்றாமல்,
எனக்குள்ளே மோகம்
கொண்டவன்
நான்தான்...
விருப்பப்பட்டு
பிடிவாத காதல்நோய் கொண்டு,
கனவுகளை நினைவுகளாய்
நடத்திக்கொண்டவன்
நான்தான்..
உனக்கும் எனக்குமான
இடைவெளியில்,
மனஅசைவாய் இன்பம்
கொண்டது
நான்தான்...
ஏதோ.,
எனக்குள்ளே,
பூதம் புகுந்ததுபோல்
புதிதாய் பிறந்தது
நான்தான்...
மனதினை
செல்களுக்கும்,
செல்களை
மனதிற்கும்
காதல் ஆசையில்
இடம் மாற்றியது
நான்தான்...
புரிந்துகொண்ட பிரியம்
மௌனமாக பிரிந்துபோக
எழ்மை காதலனாய்
வீதி கிறுக்கனாய்
திரிந்தவன் நான்தான்... !!