அழகே உன்னை கொஞ்சம் அழகாக்குகிறேன்
இலைகள் மரங்களுக்கு அணிகலனாய்
தெரிகின்றது சூரியனின் ஒளி இலைகளின் இடையில்
கோர்தததால்!!!!
தாமரை பூக்கள் நட்சத்திரங்களாய் தெரிங்கின்ரது
தூய்மையான குளத்தின் இடைவெளிகளில் அழகாய்
பூத்து வருவதால் !!!
மின்மினி பூச்சிகளை காணும்போது விண்வெளியில் மிதப்பதை போல் தெரிகின்றது இரவில் அழகாய்
வளம்வருவதால் !!!
நீலவானமும் வெண்மேகமும் கலந்து காணும்போது கடலில் பனிக்கட்டிகள் இருப்பதுபோல் தெரிகின்றது காணும் கண்களுக்கு குலிரவைப்பதால் !!!
அழகாய் பூக்கும் பூக்கள் அனைத்தும் என் கவிதைக்கு மாலையாய் அணிவிக்க வருவதுபோல் தெரிகின்றது
என் கற்பனையில் அழகு வாசனை வீசிகொண்டிருப்பதால் !!!