பேனா
![](https://eluthu.com/images/loading.gif)
என்னை எனக்கு
அதிகம் உணர்த்திவிட்டாய்
ஆழ்ந்துணர்ந்த
உணர்வுகளையெல்லாம்
அழகாய் பிரதிபலித்துவிட்டாய்
உன்னால் எனக்கு!
என் உடல்பிரியும்
உயிர் உணர்த்தும்... நீயே
எனக்கு உயிர் தரும்
நீலசாயம் பூசிய குருதியென்று...
எனக்கே எனக்கான
சொந்தம்...
என் எழுதுகோளாகிய
நீ மட்டுமே!