முட்டிக் கொல்லும் விலை மாடுகள்
காய்த்து குலுங்கிய
வயல் வெளிகளும்,
கனிந்து திளங்கிய
விளை நிலங்களும்
நாவற்ற பெரும் முதலைகளால்
காவுகொள்ளப்பட
மீள வழிதேடி முயன்று
இருப்பை தக்கவைக்க வேண்டி
தெருத்,தெருவாய்அலைகிறான் மரமேறி
வாழ்வு வழுக்கும் களுமரமாய்
ஏற முனைந்து தோற்று
பிடிமானமற்று விழுபவனையே
முட்டுகின்றன விலை மாடுகள்
சூழ கடலையும்
இடையிடையே ஏரிகளையும்
ஏதுவாக தயார் செய்து வைத்திருக்கிறது
இயற்கை
தற்கொலைக்கு தகுந்தபடி
சாணை பிடித்து மிக எளிதாக
கொம்புகளை கூர்சீவி தீட்டி வைப்பது
சந்தை வியாபாரியின்
சாணக்கியத்திலொன்று
பணம் பார்க்க
பசுக்களை வெளியேற்றி
பால் மொச்சை தேடியலையும்
கன்று குட்டிகள் சாதக் கஞ்சியிடம்
சரணகதி அடைய விட்டு
இரக்கமின்றி
முட்டி தள்ளும் விலை மாடுகள்!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.