கட்டளைக் காற்றே 11B2

காற்றே ....
விழித் திரையில் விழாமல்
மொழி உணர்வை பொழிகின்றாய்
சுழி கொண்டு வழி முடிக்க
பழியாய் யான் விழைந்தேன்

வாதை கண்டு வதங்கிடாமல்
பேதைப் பெண்ணே பொறுத்திடு....
எழுச்சிக் கொண்டு கவிபாடி
ஏற்றங்கள் மண்ணில் விதைத்திடு

என்னில் உன்னை யான் கொள்ளேன்......
உன்னில் கவிதை உறங்கும் வரை
பண்ணில் இறைந்தாய் மென் குரலாய்
விண்ணில் விரைந்தாய் வெண் பஞ்சாய்.......

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை அமுதா (4-Feb-14, 8:21 pm)
Tanglish : kaatre
பார்வை : 94

மேலே