நீ வேண்டும்

மௌனங்கள் அதிகம் பேசியதால்
வார்த்தைகள் மறந்துப்போயின
மணங்களில் விரிசல் என்பதால்
பூக்களின் மனங்கள் மங்கிப்போயின

கண்ணசைவுகள் அதிகம் தோன்றியதால்
பார்வைகள் மல்கிப் போயின
கற்பனையில் வாழ்ந்துப் பழகியதால்
நிஜங்கள் தூங்க சென்றன

உன் இருவிழிப் பார்வையில் என் இளமைத் தத்தளிக்கிறது

உன் நினைவுகளுக்கு அலைவரிசைஎண் அதிகம் உயிரே
எங்குச்
சென்றாலும் சிறிதும் குறைவின்றி வந்துச்சேர்கிறது

மின்னல்கள் தோன்றி மறைவதால் வானத்திற்கு காயமுண்டோ?
சிறுச்சிறு சண்டைகள் பிரிவுகளைத் தந்துவிட்டால்
நம் மாபெருங்காதல் போனது எங்கே ?

கதிரவன் கண்த்திறக்கும் முன் உன் நினைவுகள் விழித்தெழுகிறது
கண்ணுறங்கும் நேரத்தில் உன் நினைவுகள்
கண்ணடிகிறது

நான் சுவாசிக்க உன் முச்சிக்காற்று வேண்டும்
நான் யாசிக்க உன் இரு விழிப்பார்வை வேண்டும்
முடிவில் நான் வாழ நீ வேண்டும் ..

எழுதியவர் : ஹரினி சித்தார்த்தன் (6-Feb-14, 3:31 pm)
Tanglish : nee vENtum
பார்வை : 103

மேலே