கடற்கரையில் கண்ணகி

கடற்கரையில் காத்திருக்க வைத்தார் கண்ணகியை
காலைப் பொழுதில் ஒருநாள் சிலையும்
காணாமல் போகக் கண்ணீர் மல்கினர்
ஆட்சிகள் மாற மதுரையை எரித்த
கற்புக் கரசி கண்ணகி மீண்டும்
காட்சியும் தந்தாள் கடற்கரை யோரம்
கடலலை போலவே கண்ணகி அவளும்
அலைபாய் வாளோ அங்குமிங்கும்