அகமே அரிய ஔதடம்

அன்புள்ள மனிதா
ஆருயிர் நண்பா
இம்மைகள் யாவும்
ஈகையில் தீரும்
உண்மைகள் அரிது
ஊரினில் பகர
என்னுடை யாவும்
ஏக்கத்தைத் தாரும்
ஐயத்தை அகற்று
ஒன்றெனக் கூடு
ஓதுமை பேதம்
ஔதடம் உன்னுள்
அஃதென அறிவாய் அமைதியில் அமர்வாய்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (10-Feb-11, 9:09 pm)
பார்வை : 465

மேலே