இறுதி ஆசை இதுதான்

உன்னைப்போல் பிறந்தேன் ..
உன்னுடன் சேர்ந்து வளர்ந்தேன்...
உன்னுடன் சேர்ந்து படித்தேன் ..
உனக்காய் உயிர் துறந்தேன்..

யார் என்று தெரியவில்லையா...
என்னை இதற்குமுன் பார்த்ததில்லையா...
என்னை நான் அறிமுகம் செய்துகொள்ளவா ..
சிறிது நேரம் எனக்காய் உன் மணித்துளிகளை ஒதுக்குவாயா ....
உனக்காய் சிந்திய ரத்த துளிகளின் வீரம் அறிவாயா

இரவினில் கண் விழித்தேன் ..
நீ இன்பமாய் கண்ணுறங்க..
இருட்டினில் பதுங்கி சென்றேன் ..
நீ பகலினில் சுதந்திரமாய் செல்ல..

கடும் குளிர் என்னை தாக்கினால்..
உனக்கு போர்வை என்று நினைத்து கொள்வேன் ..
கடும் வெயில் என்னை சுட்டெரித்தால்..
நீ கருகாமல் இருக்க பொறுத்து கொள்வேன்...

எதிரிகள் என் கைவிரல்களை துண்டித்தாள்..
எனக்காய் நீ சிந்தப்போகும் கண்ணீர் துளிக்காக பொறுத்து கொள்வேன்..]
எதிரிகள் என் கண் இரண்டை பிடுங்கி எறிந்தால்..
இன்பமாய் உனக்காய் ஏற்று கொள்வேன் ..

மழை என்றும் இடி என்றும் பார்த்ததில்லை..
எதிரிகளை நம் வாசலை கூட தொட விட்டதில்லை.
உள்ளே உறங்குவது நீ என்பதற்காய்..
என் உயிரையும் விடுவதில் தயக்கம் இல்லை ..

எதிரிகள் கையில் அகப்பட்டால்..
அவர்கள் என் ஈரக்குலையை கடிக்க வந்தால்..
இன்பமாய் அதை ஏற்றுகொள்வேன் ..
இயந்திரமாய் என் உடலை மாற்றிகொள்வேன் ...

25 வயதில் உயிர் பிரிய நேர்ந்தால் .
என் இளைய மனைவி கவலைகாய் ..
இதயத்தில் ஒரு துளி கண்ணீர் வரும் .
அது உனக்காய் என்பதால் மறைந்து விடும் ..

என் இதயம் துடிப்பது உனக்கு தெரிகிறதா..
அது இந்தியா என்று சொல்லும் சத்தம் கேட்க்கிறதா.
அதில் இந்தியனாய் பிறந்ததில் மகிழ்ச்சி புரிகிறதா.
அதே உணர்வு உனக்குள் இருக்கிறதா ..

உயிர் பிரிந்ததும் மரியாதை கிடைத்துவிடும் ..
நாட்டிற்காய் மறித்ததில் உயிர் பெருமை கொள்ளும்..
என் சகோதர சகோதரிக்காய் இன்னும் என்ன செய்ய வேண்டும்..
சிறு நரிகளிடம் இருந்து உங்களை காத்து நிற்க என் சிறுவயது மகனை என்னைப்போல் மாற்ற இதயம் துடிக்கும் ...

சிங்கமாய் உயிர் துறந்தேன் உனக்காக ..
நீ குடி கொண்டிருக்கும் என் இதயத்தில் எதிரியின் குண்டு துளைத்ததர்க்காக ..
இதயத்தில் இருந்து வந்த ரத்தம் உனக்காக..
என்னை இதற்க்கு முன் கண்டிராத உங்களுக்காக .

நாட்டிற்காக உயிர் துறந்தேன் என்று நினைத்து விடாதே ..
வீட்டில் இருந்து கொண்டு செய்தி என்று சொல்லிவிடாதே..
நீ எனக்காய் விடும் ஒரு சொட்டு கண்ணீருக்காய் ..
என் இன்னொரு இதயத்தை விட்டு செல்கிறேன் ..
அவன் வளர்ந்தது உன்னை காக்க புறப்படுவான் என்று உனக்கு சத்தியம் செய்கிறேன் ...

இறுதியில் ஒன்று சொல்ல வேண்டும்..
என் பாரத தாயின் மடியில் கண்ணுறங்கும் முன் இதை சொல்ல வேண்டும் ...
உனக்குள் நான் இருப்பதில் ஐயமில்லை..
அதை என்னை புதைக்கும் முன் காண்பிப்பாயா எனக்காய் நீ விடும் கண்ணீர் துளியில்.

இறுதி ஆசை இதுதான் .
இனி இன்பமாய் கண்ணுரங்குவேன் உனக்காய்..

என் பாரத மக்களே ....

எழுதியவர் : samuel (8-Feb-14, 6:48 am)
பார்வை : 181

மேலே