விழுந்தது யாரோ
மலர் ஒன்று விழுந்தது
ஓசையில்லாமல் .
அதற்கும் வலியில்லை
மண்ணுக்கும் வலியில்லை .
குழந்தை ஒன்று விழுந்தது
அழுகையுடன் .
கதறியது வலியுடன்
தரைக்கோ யாதுமில்லை .
பெண் ஒன்று வீழ்ந்தாள்
கசங்கி
நைந்து உடல் முறையிலும்
மனதளவிலும் .