கிராமங்கள் -- உலாவரும் நெஞ்சங்கள்
காலையில் சூரியன் உதிக்கும் - அப்போது
பறவைகள் சத்தம்தனைப் பதிக்கும்,
மாலையில் சூரியன்தனைப் புதைக்கும் -அப்போது
பறவைகள்தன் கூட்டுக்குள் குதிக்கும்;
இடைப்பட்டு அமைவதுதான் பொழுது - அதைச்
சரியாகப் பயன்படுத்தும் அறிவு,
தடைப்பட்ட நேரம் என்றில்லை - கொஞ்சம்
காலதாமத மானாலும் பரவாயில்லை;
காலையுணவு கஞ்சியோ கூழோ - அதுவும்
தீர்ந்ததுஎனில் வழியில்சிறிது பச்சத்தண்ணி,
சாலைவழி என்பதெல்லாம் பெயருக்கு, ஒருவழிப்
பாதைகொண்டு போய்சேர்க்கும் ஊருக்கு;
பரபரப்பாய் உழைக்கச் செtல்லும் - மனிதர்கள்
பம்பரமாய் சுழன்றிடுவார் பக்குவத்தில்,
கிறுகிறுப்பாய் உடம்பெல்லாம் இருந்தாலும் - அதை
சுறுசுறுப்பாய் மாற்றிடுவார் மொத்தத்தில் ;
அரும்பாடாய் பட்டுப்பட்டு
அனுபவத்தைக் கற்றுக்கொண்டு அன்புடனே, அமைந்திடலாம் நல்வாழ்வு-ஏனெனில்
அவர்தம்கள்ள மில்லாநெஞ்சமே, கண்மணியே