நட்சத்திரமே நீ வந்துவிடு

அமைதி நிறைந்த
இரவுகள்
வானில் மின்னுகின்ற
அழகிய
நட்சத்திரங்கள் தங்களின்
அலுவலை நோக்கி
விரைவாக
பயணம் செய்கிறது...
சுட்டரிக்கும்
சூரியன் நிலவின்
வருகை கண்டு ஒளிந்து
கொள்ள
மாலை பொழுதல்
உதயமாக
வட்டமிட்ட
பறவைகள்
விரைந்து
செல்ல தென்றல் காற்று
தவழ்ந்து
வர - குயில்களின்
சப்தங்கள்
இயற்கையின் மாற்றத்தை
தெரிவிக்கிறது
எத்தனை சுகம்
தரும் இந்த அமைதியான
நேரம்
எத்தனை
நிம்மதி தரும்
இந்த நிலையான
வசந்தம்....
அமைதி தரும்
நிம்மதியை மறந்து
நிலையற்ற இன்பத்தை
தேடும்
அவசரமான
உலகத்தில்
புதிதாய் உதித்த
நட்சத்திரமே...
உனது அழிவற்ற
வானத்தை
தாங்கி
பிடித்துவிடு
இவ்வுலகில் வாழும்
உயிர்களுக்கு நிலையான
நிம்மதியை தந்துவிடு