நாடுக்குருவி என் வீடுக்குருவி

நாடுகுருவி என் வீடுக்குருவி
--------------------------------------------



1. சின்னஞ்சிறு வயதினிலே

என் வீட்டு முற்றத்திலே

முதன் முதலாய் பார்த்தேன்

துள்ளி துள்ளி இறை சேர்க்கும்

நம் நாட்டுக் குருவியை

இல்லை வீட்டுக் குருவியை !


2. கருநீல மணிபோன்ற

புள்ளிகள் பதிந்த

அதன் பழுப்பு நிற

சிற்றுடலும் கரிய சிறு தலையும்

சுட்டித்தனமாய் ஓடி

அங்கும் இங்கும் அலையும்

அதன் போக்கும்

அதன் பால் பெறிதும்

என்னை ஈர்த்து சென்றது


3. திறந்திருக்கும் என் வீட்டு

ஜென்னல் கதவு

இந்த குருவிகள்

வலம் வரும் ராஜபாட்டை

வீட்டு முற்றதின்மேலே

ஒரு சிற்றிடம் -அது

வெற்றிடமாய் இருந்தது

பல நாளாய் !


4. அன்றொருநாள் அதிகாலை

எழுந்து விட்டேன்

குருவிக்கு நெல்லும் அரிசியும்

முற்றத்தில் தூவிடவே

"தித்" "தித்" என்ற குருவிகூவ

முற்றத்தின் வெற்றிடத்தை

சற்று அன்னாந்து பார்க்க தூண்டியது

வெற்றிடம் இப்போது அங்கு ஏதுமில்லை

நேர்த்தியான குருவிக்கூடு

அங்கு வுருவாகி நின்றது

என் வீட்டு குருவி

தன் சுற்றம் சூழ

அதில் குடிபுகுந்தது !

கத்தி கத்தி

என்னை கூவி அழைத்தது

என்னுடன் நேர்த்தியாய்

நட்பும் கொண்டது

நாட்கள் பல கழிந்தோடி

அன்றொரு நாள்

குருவி கூட்டில்

சப்தம் பலவாகி ஒலித்ததுவே

சற்று கிட்டே சென்று பார்த்தபோது

சின்னஞ்சிறு குருவிபாப்பா

நேர்த்தியாக தன் பவள வாயை

திறந்தும் மூடியும் காட்டிநின்றதுவே

ஓடி சென்ற தாய்க் குருவி

வீடு திரும்பியது

சுமந்து வந்த தீனியை

சேயின் வாயில் திணித்தது

ஊட்டியும் விட்டது



5. பாலகனாயிருந்த நானும்

இளைஞன் ஆனேன்

கல்வி நிமித்தம்

வெளி நாடு சென்றேன்

சில ஆண்டுகள் பின்னே

வீடு திரும்பினேன்

அங்கு என் வீடு அடுக்கு

மாடி வீடாய் ஆகி இருந்தது

இப்போது அங்கு

முற்றமும் இல்லை

திறந்த ஜென்னலும் இல்லை

வீட்டு அறைகளெல்லாம்

குளிர்சாதனம் அமைக்கப்பட்டு

இருண்டு அடைந்து கிடந்தனவே

தேடி தேடி பார்த்தேன்

என் குருவி நண்பனும் இல்லை

அவன் சந்ததியும்

அங்கு எங்கும் காணவில்லையே

அக்கம் பக்கம் தேடினேன்

பட்டினம் முழுதும்

குருவி காணவில்லையே

எங்கு சென்று மறைந்தனவோ


யாருக்கும் தெறியவில்லையே!



6. வளர்ந்து விட்ட பட்டணத்தில்

தனி வீடுகள் இல்லை

மாடி வீடுகளாய் மாறிவிட்டனவே

சுட்டறு புறத்தில் மரங்கள் இல்லை

என் வீட்டு குருவி வாழ

இடம் ஏதும் இல்லையே !

நுண்ணலை கோபுரங்கள்

ஆயிரம் ஆயிரம் உருவாகி

இந்த நாட்டு குருவிகளை

கூண்டோடு அழித்தனவே

எஞ்சிய சில பல

எங்கோ காட்டை நோக்கி

சென்றடைந்து

இன்னும் காண கிடைக்கவில்லையே !










.

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (13-Feb-14, 11:45 am)
பார்வை : 64

மேலே