காதல்

ஆதம் ஏவல் காலத்தில் தோன்றி இக்காலம் வரை
வெவ்வேறு வடிவில் வெவ்வேறு மனிதர்களை கடந்து செல்கிறது
ராமன் சீதா காதல் இன்று காணாமலே போனது
பார்த்ததும் காதல், பேசினால் காதல், பார்க்காமல் காதல்,
என பல விதமாக இன்று காதலை காதலிக்கின்றனர் ..
அன்னையர் தினம் அன்று அன்னையுடன் நேரத்தை செலவிடுவதில்லை
சிறிய வாழ்த்து மடல் கூட தருவதில்லை ஆனால்
காதலர் தினத்தன்று முழு நேரத்தையும் காதலுக்காக செலவிடுகிறோம்
பிப்.14 அன்று மட்டும் காதலுக்கான தினம் அல்ல
நம்மை சுற்றி உள்ளவரையும் நம்மை நேசிப்பவரையும்
நாம் நேசிக்கும் ஒவ்வொரு நாளும் காதலுக்கான தினமே...
அனைவருக்கும் எனது இனிய காதலர் தின வாழ்த்துக்கள் ..


அனைவரையும் நேசியுங்கள் ( நமக்கு காதலி இல்லேன்னா பொறாமைல இப்படி தான் எதையாவது கிறுக்க தோணுமோ :P )

எழுதியவர் : சரவணன் (13-Feb-14, 8:14 pm)
Tanglish : kaadhal
பார்வை : 132

மேலே