இது கடிதத்தால் வந்த காதல் - சி எம் ஜேசு

அறியாபருவம் தெரியா உருவம்
இது கடிதத்தால் வந்த காதல் - அவளை

வளைக்கும் திறன் இல்லை - எனக்கு
வணங்கிடா சிறம் இல்லை

அமுதமேனும் வார்த்தைகளால்
அம்புலிமாமா கதை சொல்லி

அலைகளால் எழுந்த -அவளின்
அன்பு புன்னகையில் இருந்து வந்த காதல்

லட்சம் பேர்கள் நின்றாலும் இருவர்
மனதினின்று மட்டும் எழுந்த நிஜக் காதல்

எழுத்து வரிகளால் அணைத்து
வார்த்தை முத்தங்களை பதித்து

பசையில் எச்சில் பதித்து பண்போடு
முடித்து மடித்து இடித்து எடுத்து - சிகப்பு

தொப்பிக் காரனிடம் போட்டு - இரு
கைக் கூப்பி அனுப்பிய இது கடித்தால் வந்த காதல்
********* ********* ********* ********* **********
வாழ்த்துக்கள் பதிக்கிறேன் கடிதங்களால்
வளர்ந்த முற்கால காதலுக்கு இன்றய நாளில்

எழுதியவர் : சி.எம்.ஜேசு (14-Feb-14, 11:03 am)
பார்வை : 114

மேலே