என்னவரை தொடராமல் விட்டுவிடுங்கள்

நிலவே! அவரை
கண்டு மோகம்
கொள்ளாதே - நான்
இருக்கிறேன்
மறந்து விடாதே...

நீ மோகத்தை
மறைக்க மேகத்தில்
மறைந்தாலும்
தெரிந்து கொள்வேனே...

பூவே! அவரை
உன்பால் இழுக்க
எண்ணாதே - நான்
இருக்கிறேன்
மறந்து விடாதே...

நீ முள்ளுக்குள்
மறைந்து முகமூடி
அணிந்துக் கொண்டாலும்
அறிந்து கொள்வேனே...

தென்றலே! அவரை
தழுவி ஆட்க்கொள்ள
செல்லாதே - நான்
இருக்கிறேன்
மறந்து விடாதே...

நீ புயலாய்
மாறி செல்லவில்லை
என்றாலும் நான்
புரிந்து கொள்வேனே...

அன்பெனும் மழையை
நிதமும் பொழிந்து
பண்பெனும் நெறியை
காதலில் புகுத்தி

ஒரு விகலையிலும்
பிரியாது நிறுத்தி
அவரை என்னுயிருடன்
சேர்த்தேனே...

- வைஷ்ணவ தேவி

எழுதியவர் : வைஷ்ணவ தேவி (15-Feb-14, 3:23 pm)
பார்வை : 663

மேலே