அபிநயச் சிறகுகள்

அபிநயச் சிறகுகள்
அவளிடம் சிரிப்புகள் - என்

நினைவினில் பொருத்தி நான்
நிலவினில் பறக்கிறேன்....

கனிமரம் கண்டுநான்
களைப்பாற நினைக்கிறேன்.....

காதலால் கண்மூடி
இளைப்பாற இசைகிறேன்.....

இதழோரம் வியர்வையும்
இனித்திடச் சுவைக்கிறேன் - காதல்

இம்சையும் இன்பமாய்
இருந்திட ரசிக்கிறேன்.......!!..

காலைக் கதிரவன் ஒளி அது
காயத்திற்கு சால்வையாக....

கண்ணாடியும் கேலி செய்ய....
கைகளால் முகம் மூடுகிறேன்.....

அடடா - அடடா
இப்போது உணர்கிறேன்.....

அவளது அபிநயம்
அதிரடிப் போர்க்களம்.....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (15-Feb-14, 3:46 pm)
பார்வை : 74

மேலே