வெள்ளை நிற தேவதைகள்

கொழு கொம்பு
இல்லாக் கொடி போல
புரண்டு துவண்டு போகும்
எரியும் இரவுகளை அணைத்தபடி
புலர்ந்தும் புலராத காலைகளோடு
கலவரங்களின் நிலவரங்களை
கடிவாளமிட்டுக் கட்டி
பசிகளை எல்லம் அடக்கி ஆண்டு
கவலைகளின் வலியை மட்டும்
புசித்துக்கொண்டு
புராண காலத்து கட்டுகளோடு கட்டுண்டு
வெளியேற முடியாமல் சிக்குண்டு
வதைகள் என்னும் சிதைகளை மூட்டி
இன்றும் வெள்ளை நிற தேவதைகளாக
வதை உறும் பெண்கள்
மழை காணா விளை நிலம் போல
விதவைகளாக...!