தந்தையின் பிரிவில்

அப்பா !இச்சொல்லை சொல்லும்போதே
சொல்ல முடியாத மகிழ்ச்சி நெஞ்சில்
அன்னையிலும் சிறபபுண்டோ அவள்
அன்பினும் அரிய அமிழ்துண்டோ ?

உண்டெனில் தந்தையே அவ்வமழிதம்
அதிகம் பேசுவதில்லை எனினும்
அப்பாவின் அன்பாலே அதிகம்

ஆட்கொள்ளப்பட்டவள் அவரின்
அன்பிலே மிகுதியாய் மகிழ்ந்தவள்
அவர்கை பிடித்து நடந்ததிலே

ஆனந்தம் கொண்டவள் அப்பாவின்
தோள்சாய்வதே சுகமென வாழ்ந்தவள்
தற்போது அவர்பிரிவில் வாடுகிறேன்

மீண்டும் அப்பாவை கொடுத்திடுவாயா
இறைவாயென இல்லாத அவனிடுத்து
இல்லையென தெரிந்தும் கேட்கிறேன் ...

அற்பவரமொன்று கிடைத்திடுமா
அவ்வரத்தினால் தந்தையை பெறுவோமா?
என நித்தம்நித்தம் ஏங்குகின்றேன் ...

அம்மைநோயில் அவதியுற்றபோது
ஆசைப்பட்டதை கேளென்ற அம்மாவிடம்
என்னப்பா வேண்டுமென்று கூறாமல்

உள்ளுக்குள் குமுறியதை தந்தையே
நீ அறிந்தாயோ அன்றிரவே
கனவில் வந்து கண்ணீர்விட்டாயே

உனைக்கண்டதும் கண்விழித்து
சுகமானேன் நிஜத்தில் நீ வருவாயோ
தவிக்குமென்னை அணைப்பாயோ ?

எழுதியவர் : லலிதா.வி (22-Feb-14, 11:56 am)
பார்வை : 644

மேலே