ஏமாற்றத்தின் வெளிப்பாடு

பொய்கள் முரசு கொட்டும் ஓசையில்
உண்மையின் சத்தம் காற்றில் கரைந்துவிடுகிறது
கயமை பின்பறை அடிக்கின்றன
இயலாமை கொம்பு ஊதுகின்றன
இழிவுச் சொற்கள் நடனம் ஆடுகின்றன !
உண்மையின் அழுகையை
காற்றிலிருந்து பிரித்து கேட்கமுடிந்தால்
அங்கும் தேம்பல் மட்டுமே மிஞ்சுகிறது
கண்னீர் துளிகளினால் கரைந்து விடுகிறது !
மனசாட்சி கரைப்பட்டு விட்டது
எத்தனைதான் அழுது முடித்தாலும்
மீண்டும் வந்து ஒட்டிக்கொள்கிறது
ஏமாற்றத்தின் வெளிப்பாடு !