அகமலர்களின் நந்தவனம்
நேரத்தை
கண்களில் கட்டிக்கொண்டு..
இறக்கை
கட்டிப் பறக்கும்
இந்த நகர வாசிகள்..
கொஞ்சம்..
ஆசுவாசப் படுத்திக்கொள்ள
அந்த
வேடந்தாங்கலையே
கட்டி இழுத்து
மேடவாக்கத்தின் மத்தியில்
ஒரு
மேடை அமைத்து
கொடுக்கின்றது இந்த சங்கம்..!!
அறுபதுகளைத் தொட்டுவிட்ட
சிறு குழந்தைகள்
அவர்களது..
மலர்முகம் கண்டாலே
அந்த நாள் இனிய நாள்தான்..!!
பழமை என்றாலும்
எந்த பாரங்களையும் தாங்கும் அந்த
இராஜ இராஜேஸ்வர அஸ்திவாரங்கள்..!!
நாற்பதுகள்
இங்கே
இருபதுகலாக மாறி நிற்கின்றனர்
நண்பர்கள் குழு கொண்டு..
சுயநலம் இல்லா
பொதுநல சங்கத்தின்
கோபுர அங்கங்கள்..
இவர்களின்..
பணி பக்திப் பரவசத்தில்
மெய் சிலிர்க்கின்றேன் நான்..!!
இவர்களால்தான்..
மாதம் மும்மாரி
விழா பொழிகின்றது
எங்கள்.
சிவகாமி நகரினிலே..!!
முகமலர்கல்
ஆங்காங்கே மலரும் பொழுது..
காற்றினை அலங்கரிக்கின்றது
அகமலர்களின் புன்சிரிப்புகள்..!!
மலர்கள்
பூத்துக் குலுங்கும்
நந்தவனமாக
மாறுகின்றது நம் நகரும்..!!
முகவரிகளை
முகம் கண்டு
அடையாளம் காணவைக்கும்
இந்த முயற்ச்சிக்கு
நன்றிகள் சொல்லி மாளாது..!!
----------------------------------
இது ஒரு சமர்ப்பணக் கவி..
நாங்கள் வசிக்கும் மேடவாக்கம் சிவகாமி நகரில், சிவகாமி நகர் பொதுநல சங்கம் இருக்கின்றது (SNPWA). நகருக்காக பல பொது நல சேவைகளையும், சிறப்பு நிகழ்சிகளையும், விழாக்களையும் சிறப்பாக செய்து வருகின்றது. இந்த வருடம் குடியரசு தினத்தன்று நடந்த விழாவில், ஒரு கவி எழுதி சமர்பிக்கலாம் என்று தோன்றியது. விழா நடக்கும் பொழுதே எழுதி மேடையில் அதனை சமர்பித்தேன். அதனைத்தான் இங்கே பகிர்ந்துள்ளேன்.