சொல்லாட்டம் - கே-எஸ்-கலை

அப்பாவி மக்களின் முதலை
அதிகார பலத்தால் அள்ளி விழுங்கியது
ஆட்சிக்கு வந்த முதலை !
----
பக்தன் கண்களை மூடினான்
கடகடவென ஓதிக் கொண்டே பூசாரி
தட்சிணை எவ்வளவு? தேடினான் !
----
ஆங்கிலத்திடம் கிடைத்தது விடுதலை
ஆண்டுபல கடந்து போயும் விடவில்லை
அரசியல்வாதிகள் தம் கெடுதலை !
----
முப்பொழுதும் அசராமல் உழுதான்
ஒருவேளை கஞ்சிக்கு வழியில்லா உழவன்
எப்பொழுதும் அயராமல் அழுதான் !
----
கஷ்டப்பட்டு பட்டம் பெற்றான்
ஏற்ற தொழில் இல்லை யென்று
கடற்கரையில் பட்டம் விற்றான் !
==================
சிலந்தி கட்டிவைத்த பின்னல்
வழிதவறி வந்து வீழ்ந்த பூச்சிக்கு
ஒட்டிக் கொண்டதால் இன்னல் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (26-Feb-14, 9:46 am)
பார்வை : 194

மேலே