அம்மா

மூச்சடக்கி ஈன்றாய்
என்னையே -என்
மூச்சுள்ளவரை காப்பேன்
உன்னையே!
------------------------------
அம்மா காட்டினாள்
நிலவை!
அழகாய் ஊட்டினாள்
உணவை!
அடடா !!
அமாவாசை முழுதும்
இரவாக,
அவளே மாறினாள்
நிலவாக!!

-------------------------------
பத்தியம் இருந்தாய்
பத்து மாதம் சுமந்தாய்
நான் பிறப்பதற்காக!

பட்டினி கிடந்தாய்
பாரம் சுமந்தாய்
நான் படிப்பதற்காக!

இன்னும் சுமப்பாய் நீ எனக்காக!

இறுதி ஊர்வலத்தில் நான்
உன்னை சுமக்கும் வரை!!

எழுதியவர் : பாரதி செந்தில்குமார் (26-Feb-14, 6:20 pm)
சேர்த்தது : செந்தில்குமார்
Tanglish : amma
பார்வை : 143

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே