வாழக்கை என்னும் பயணத்தில்

வாழக்கை என்னும் பயணத்தில்
கடமை என்னும் காவலன் துரத்துகிறான்
கரடு முரடான பயணத்தில்
சோதனையும் வேதனையும் தான் தடைகள்,

இச்சோதனையில் வெற்றி என்றால்
நாளைய சாதனையல்லவா உன் கையில்
உன் சிந்தனைகளை செல்லரித்துப்போன
ஒலைச்சுவடியாக ஆக்கி விடாதே!

நாளைய கல்வெட்டாக திகழவேண்டும்
தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால்
வெற்றி நிச்சயம் என்பதை மறவாதே
உன் வாழ்க்கை உன் கையில்

ஓர் அறிஞன்
சொன்ன வார்த்தை
இல்லை தத்துவம்
கேளுங்கள்......

("நீ துணிந்தால் தூண்கள் துரும்பாகும்
நீ துவண்டாள் நாணல் இரும்பாகும்
கவலை நோயிக்கு விருந்தாகும்
உன் கலங்காமனம் தான் அதற்க்கு மருந்தாகும்" )
-கோரி டெயுன்பு

நீ இன்றைய சிந்தனையில் வாழக் கற்றுக்கொள்
நாளைய பொழுது உனக்காக விடியும்
அதுவும் நன்னாளாய்!

என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (27-Feb-14, 2:46 pm)
பார்வை : 328

மேலே