என் சாவுக்காவது வருவாயா

உனக்கு பதில் எனக்கும்
எனக்கு பதில் உனக்கும்
கேட்டு வைத்த
மரணம் வாய்க்குமா?
எப்பொழுது நிகழ்ந்தாலும்
என் மரணத்தின்
கடைசி நொடி
உன் நினைவோடுதான்
முற்றுப் பெறும்
‘திருமணத்திற்கு
வராதவர்கள்கூட
சாவுக்கு வருவார்கள்’ என்பார்கள்
நீ
என் சாவுக்காவது
வருவாயா?