என் இதயமே பரிசாகத் தருகிறேன் - மணியன்

உணர்வுகளின் உச்சம்
உருப் பெறும்போது
உனது நினைவுகள்
உள்ளிருந்து மனம்
உருக வைக்கிறது . . . . . .
**********

கண்மூடும் வேளை
கனவுகளின் மிச்சம்
கதவு திறந்து
காலை வரை
காலம் நனைந்தே விடிகிறது. . . . .
**********

விடிகின்ற வரையில்
நடிக்கின்ற துயிலில்
துடிக்கின்ற இமைகளில்
வடிகின்ற கண்ணீர்
படிந்தே உறைகின்றது. . . . .
**********

பிரிவுகளின் வலி
புண்ணாகும் தருணம்
புரியாத புதிராய்
புறம் வந்து அகமும்
புரியாமல் விழிக்கின்றது. . . . . .
***********

சிதிலமான எண்ணம்
சிறகொடிந்து மனம்
சிதறிச் சிதறி
சின்னா பின்னமாகி
சிறுசிறு துகளாகிறது. . . . . .
**********

பாவை உன் நினைவு
பாதம் வரை நிறைந்து
பாதை மறந்து
பாழான இதயத்தை
பாவமாய்ப் பார்க்கின்றது. . . . .
**********

நாதமென உனது
நேசக் குரலினை
நிதமும் கேட்டிட
நெஞ்சாங் கூடும்
நிதமும் தவிக்கின்றது. . . . . . .
***********

போதுமடி பெண்ணே
பரிகாசம் செய்யாதே
பக்கம் வந்துன்
பாதம் காட்டு
பரிசாகத் தருகிறேன்
பாழான என் இதயமதை
பாத காணிக்கையாக . . . . . . . . .


*-*-*-* *-*-*-*-* *-*-*-* *-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (28-Feb-14, 3:25 am)
பார்வை : 846

மேலே