விடுதலை
இளைஞர்களின் தலைவன்
இரும்பு மனிதன்
இந்தியத்தாயின் வீர மைந்தன்
பாரதத் தாயின் பன்னீர் புஷ்பம்
வீர முழக்கமிட்ட வீரனே
உன்னை வெல்ல எவருமில்லை தோழனே சுதந்திரத் தாகம் தனிய
சுதந்திர எண்ணம் மலர
அகிம்சை இன்றி கோபம் கொண்டாய் அர்ச்சணையாய் வீர முழக்கம் பாடினாய்
சுதந்திரம் கிடைப்பதற்குள் மண்ணில் மறைந்ததேன் தோழனே
சுதந்திரம் கிடைக்கும் என்ற எண்ணமா
இல்லை புதியதொரு நேதாஜி தோன்றுவான்
என்ற கர்வமா
உன்னை போல் யாரும் இல்லை
உலகில் எவரும் தோன்றவில்லை
மறுபடியும் பிறப்பாயா மண்ணினை காப்பாயா எங்கள் வினாவுக்கு விடையாக வருவாயா
அல்ல விடைதான் தருவாயோ
சொல் வீரனே சொல்