நடித்துப் பழகி

பாம்பின் பலமே
அதன்
பல்லிலிருக்கும் நஞ்சுதான்..

பல்லைப் பிடுங்கிவிட்டாலும்,
பாய்ந்து
சீறினால்தான் சிறப்பு..

அஞ்சிக் கிடந்தால்,
அடுத்துவரும் இறப்பு..

அது தெரிந்துதான்
நடிக்கப் பழகிக்கொண்டான்
மனிதன்,
நன்றாய் வாழ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Mar-14, 6:10 pm)
பார்வை : 3456

மேலே