துளி துளி துளி - கே-எஸ்-கலை

பக்கத்து மரத்தில்
பழுத்த மாம்பழங்கள்
பறக்கும் குரங்குகள் !
==
முழுவயிறு நிறைக்க
ஓய்வின்றி உழைக்கும்
சிற்றெறும்புகள் !
==
நாய்களுடன்
குழந்தைகள் காத்திருப்பு
குப்பைத் தொட்டி !
==
அலங்கோல கட்டில்
சிறுமியின் அழுகை
மிரட்சியில் பொம்மை !
==
பறவைக் கூட்டம்
தாகத்துடன் பறக்கும்
பனி மலைகளுக்கு மேலே !
==
உணவு கிடைத்ததும்
காகங்கள் கரையாது
ஆறாம் அறிவிருந்தால் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (5-Mar-14, 6:04 pm)
பார்வை : 349

மேலே