தியானம்

அவன் நகங்கள் நீண்டுயிருந்தன..
அப்படியே உட்கார்ந்தான்..

மனம் எங்கோ லயித்து இருந்தது...
மணற்பரப்பில் குறுக்கும் நெடுக்குமாக
கோடுகளை இழுத்தான்...

வட்டமாய்..
சதுரமாய்...
முக்கோணமாய்...

அதன் மீது ஏறியமர்ந்து
உரக்க வாய் திறந்தான்...
உச்சரிப்புகள் வெகுசுலமாய்
உருண்டு ஒடின...

கண்களை திறந்தபோது
மனம் லேசாக இருந்தது..

எழுந்து நடக்க ஆரம்பித்தான்...
அவன் நகங்கள் நீண்டே இருந்தது.

எழுதியவர் : கவிதை தாகம் (10-Mar-14, 10:09 am)
சேர்த்தது : தசரதன்
Tanglish : thiyanam
பார்வை : 62

மேலே