கிளைகள் விரிந்த போதிமரம்

பிறையற்ற மத்திய இரவின்
முதுகின் மீதேறி
ஆபரணங்கள் பூட்டிய தேரெனவே
வந்திரங்கிவிட்ட கனவில்
பருத்திப் பூ வாசனை கோர்த்து
தலைகோதி வகிடெடுத்து
அரைக்கோல கொண்டையிட்டு
பாதரசமென உருண்டோடிய
பார்வையில் அதன்பிடியில
தகர்ந்து விடக்கூடிய
மதில்களில் ஒளிந்துகொள்ளும்
அந்நிறப் பல்லியாகவே
ஒட்டிக்கொண்டேன்...

இருமாப்புற்ற
அத்தனை அவையங்களையும்
நொறுக்கிச் செறிக்க
மாறுவேடம் பூண்டதொரு
காமப்பருந்து
நேர்நின்ற சமரில்
வாளோடு வீழ்ந்துவிட்ட உனக்கென
கவலையுற்றுக் கிடக்கிறேன்
அப்போதே மீட்பென மீண்டாய்
நான் நொறுங்க அழித்தாய்
நீட்சி பொருந்திய அத்தனை கனங்களிலும்
ஓயாமல் எதிரொலித்தது
உனக்கும் எனக்குமான பாடல்.

நீ புதுப்பித்தளித்த போதிமரமென
பரந்து விரிகிறேன் கிளைகள் நூறாக
எண்ணங்கள் சிறகுவிரிய
அத்தனையும் பறவைகளாய் மாறி
அமர்ந்தென்னை வலிகொண்டது
வேர்களை சுருட்டி
உனக்கெனதாக்கியணைத்து
அழுத்தமாய் பதிக்கிறாய்
பெண்னெனும் பெயரை.

எழுதியவர் : வன்மி (10-Mar-14, 5:54 pm)
பார்வை : 73

மேலே