நீதானே என்னவனே

ஒரே ஒரு
நிமிடம் உன் கண்ணியமான
கண்களினாலே என்னை
ரசித்தாய் !!

ஒவ்வொரு நிமிடமும்
விழி வலிக்க உன்னை
மட்டுமே என் கண்களில்
ஏந்திக் கொண்டிருக்கிறேன் நான் !!

பார்க்கிறாயோ இல்லையோ
என் ஒப்பனைகள்
உன் ரசனைகளே !!

உன் பார்வை
படும் நேரம்
அறிகிறேன் ,தவத்திற்கு
பலனுண்டு என !!

நீ இல்லாத
வெறுமைகளை நீக்கி
விடுகின்றன ..
என்னுடன் கைகோர்த்த
உன் நினைவுகள் !!

என் நேசம் நீ !
என சொல்லத் துடிக்கும்
ஒவ்வொரு நாள்
ஆசையும் உன் ஒரு
புன்னகை கண்டே
அமிழ்ந்து விடுகின்றன !!

நானறிவேன், உன்
நெஞ்சத்தில் எனக்கொரு
இடமுண்டு என்று !
அதனாலேதான் என்
இதயத்தையே பரிசாய்த்
தந்துவிட்டேன் உனக்காக !!

என் அறிவுக்குத் தெரியும்
நீ என்னை விரும்புகிறாய்
என்று ..
மனம் அலைகிறது ,
மனதால் இணைய
வேண்டும் என !!

என்றுமே எனக்கானவன்
நீயே !நீ என்னில் இணையும்
நாட்களை கனாக்களில்
ஓடவிட்டு ரசித்துக்
கொண்டிருக்கிறேன் நானே !!

எழுதியவர் : கார்த்திகா AK (11-Mar-14, 6:47 pm)
Tanglish : neethanae ennavane
பார்வை : 3764

மேலே