நிலாமகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து

(12-03-2014 இன்று நிலாமகள் பிறந்தநாள்)
பாசமலரே...!
அன்பு தங்கையே...!
நிலா மகளே..!
உனை வாழ்த்தி எழுதிட
உடனடி மை தேடினேன்
வானவில் தானாக தானமாக
முன்வந்து தன்னையே தந்தது.
வண்ண வண்ண
மை ஊற்றி
உன்னை உன்னை
வாழ்த்தி எழுதினேன்.
எழுதப்பட்ட தாளுக்கு
சிறகுமுளைத்து
ஏழு வண்ணத்தில்
வண்ணத்துப்பூச்சிகளாக
என் முன்பு
அணிவகுத்து நின்று
வானில் பறந்திட
அனுமதி கேட்டது.
அனுமதி தந்துவிட்டேன்..!
தங்கையே...!
சற்று விழிமூடி திறந்துபார்.
உன் பிறந்தநாளுக்கு வாழ்த்திட
படபடக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
என் வாழ்த்தினை பாடுகிறது பார்..!
~~நிலா மகளே!
~~அன்பு தங்கையே!
~~உழைத்து சாதித்து
~~வாழ்வில் சகலமும்
~~வசப்பட வாழ்த்துகிறேன்!
~~வாழ்க ! நீடுழி வாழ்க..!
~~வையகம் போற்றிட வாழ்க...!
***இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கையே..! ****
----------------------------------------------------------------------------
---------- இரா. சந்தோஷ் குமார்