நினைவுகளே நினைவுகளே

போராடும் வாழ்கையில்
போராட்டம் உன் நினைவுகள்
என் வலுவிழந்து விட்டேன்
நித்தமும் புரியாத ராகத்தில்
இசை பாடும் வசைகளால்
நீண்ட நாட்களாய் ஒரு
நிலைகொள்ளாமல் நீயென்
என்னை நித்தமும் நிந்திக்கிறாய்
நீங்காமல் சித்தம் வந்துதே
பித்தாக்கிறாய் நினைவுகளே நீ
என்னைவிட்டும் நீங்கிவிடு
நிம்மதியாய் ஒருநாளேனும்
இருக்கவிடு நினைக்காமல்
இருக்கவே நினைக்கிறேன்
நினைவுகளே இங்கு என்
நிழலாகிப்போனது நிறம்மாறி
என்னிலேயே நீ நீந்துகிறாய்
நீந்த முடியவில்லை உன்
நீட்டல்களோடு நிறுத்திவிடு
இல்லையேல் மூச்சு நின்றுவிடும் ,,,

நினைவுகளின் மீட்டலோடு,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (13-Mar-14, 3:08 pm)
பார்வை : 247

மேலே