நாளைய பாட்டி சொல்லும் கதை -அப்பாவி மான்களும் வேட்டை மிருகங்களும்

நாளை (ய) பாட்டி சொல்லும் கதை

ஒரு காட்டில கொஞ்ச மான்கள் சந்தோசமாய் வாழ்ந்து வந்தன . ஆனால் அவைகளின் சந்தோசம் நெடுநாளைக்கு நிலைக்கவில்லை . அந்த காட்டில் வாழ்ந்து வந்த சிங்கங்கள் அந்த மான்கள் இரை தேட சென்ற இடங்களில் அவற்றை வேட்டையாடத் தொடங்கின . காலம் செல்ல செல்ல மான்கள் வாழ்ந்து வந்த இடங்களை தேடி வந்து அவைகளை வேட்டையாடி அவைகளை அவைகள் வாழ்ந்த இடங்களில் இருந்து கலைத்து தாங்கள் அந்த இடங்களில் தங்கவும் தொடங்கின.

இவ்வாறு அப்பாவி மான்கள் வேட்டையாடப்படுவதையும் அல்லல் படுவதையும் பார்த்த அந்த காட்டில் வாழ்ந்த புலி , ஓநாய் , கரடி , சிறுத்தை , நரி அவைகளை சிங்கங்களிடம் இருந்து பாதுகாக்க துணிந்தன . அப்பாவி மான்களை வேட்டையாட வந்த சிங்கங்களுடன் சண்டையிட்டு அவைகளை காப்பாற்றியும் வந்தன . யாருக்கு பின்னால் நின்றால் தாங்கள் உயிர் வாழலாம் பாதுகாப்பாக இருக்கலாம் என தங்கள் மனதுக்கு பட்டது போல கொஞ்ச மான்கள் புலிக்கு பின்னாலும் கொஞ்ச மான்கள் ஒநாயுக்கு பின்னாலும் கொஞ்ச மான்கள் கரடிக்கு பின்னாலும் கொஞ்ச மான்கள் சிறுத்தைக்கு பின்னாலும் கொஞ்ச மான்கள் நரிக்கு பின்னாலும் நின்றன. இப்படியே கொஞ்ச நாள்கள் போனது .

தங்களில் யார் பெரிது அப்பாவி மான்களை யாரால் சரியாக பாதுகாக்க முடியும் என்ற போட்டி புலி ஓநாய் கரடி சிறுத்தை நரிக்குள்ளே எழுந்தது . அது ஒரு கட்டத்தில் அவைகளுக்கிடையே சண்டையாக உருவெடுத்தது. ஒன்றோடு ஒன்று முட்டி மோதத் தொடங்கின . காலப்போக்கில் புலிக்கு பின்னால் நின்ற அப்பாவி மான்களை ஓநாயும் கரடிக்கு பின்னால் நின்ற அப்பாவி மான்களை புலியும் ஓநாயுக்கு பின்னால் நின்ற அப்பாவி மான்களை நரியும் என்று மாறி மாறி வேட்டையாடத் தொடங்கின . அப்பாவி மான்களும் நாளுக்கு நாள் வேட்டையாடப் பட்டுக்கொண்டே இருந்தன .மான்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் கடவுளுடம் மண்டியிட்டு கொண்டிருந்தன

அந்த தருணத்தில் பக்கத்து காட்டில் இருந்து பெரிய காட்டெருமை இந்த மான்களை காப்பாற்ற வந்தது . ஆனால் அந்த காட்டெருமையும் நரியோடு சேர்ந்து புலியோடு சண்டை போட தொடங்கியது . அப்பாவி மான்களை அதுவும் வேட்டையாட தொடங்கியது . ஒரு கட்டத்தில் காட்டெருமை தனது காட்டுக்கு திரும்பி போய்விட்டது . மற்ற மிருங்களை எல்லாம் அடித்து துரத்தி விட்டு புலி மான்களுக்கு பாதுகாப்பாக இருந்தது. சிங்கத்தோடு தொடர்ந்து சண்டையிட்டு கொஞ்ச சிங்கங்களையும் அழித்து தனக்கென்று தனி இராச்சியம் அமைத்து மான்களை நல்ல முறையில் பாதுகாப்பாக வைத்திருந்தது .

இப்படியே கொஞ்ச காலம் உருண்டோடியது . தன்னால் எதுக்குமே செய்ய முடியாத சிங்கங்கள் வேறு காட்டில் உள்ள பெரிய மிருகங்களின் உதவியோடு புலியோடு சண்டை போட தொடங்கின . புலி வேஷம் போட்டுக்கொண்டு புலியோடு இருந்த நரிகளும் புலியை பின்னால் நின்று கடிக்க தப்பி ஒளிந்திருந்த புலிகளை கழுகுகளும் காட்டி கொடுக்க எல்லா புலியும் அழிந்தே போனது . புலியை கொல்கிறேன் என்று சொல்லிக்கொண்டே அப்பாவி மான்களையும் கொன்றே தீர்த்தது சிங்கம் அந்த காடு முழுவது ஒரே இரத்த ஆறு ஓடியது மான்களும் கதறின கத்தின . அந்த ஒலி எல்லா காடுகளுக்கும் கேட்டன ஆனால் எங்கிருந்தும் எந்த மிருகமும் வரவே இல்லை .
மீதியிருந்த மான்களை ஒரு இடத்துக்குள் அடைத்து வைத்து தினம் தினம் துன்புறுத்தி வந்தது . அதில் அழகிய இளம் புள்ளி மான்களை தோலுரித்து வேட்டையாடியது. இளம் மான்கள் தொடர்ச்சியாக காணாமல் போய்கொண்டே இருந்தன . தங்களுக்கு ஒரு நல்ல காலம் வராதா தாங்கள் சுகந்திரமாக வாழ ஒரு வழிபிறக்காத தங்கள் தொலைந்த சொந்தங்கள் வந்து சேராதா என மீதியிருந்த அப்பாவி மான்கள் ஏங்கி கொண்டேயிருந்தன .
வேறு காட்டிலிருந்து எதாவது மிருகங்கள் வந்தால் தங்கள் காணமல் போன உறவுகளை கண்டு பிடித்து தரும் படி கெஞ்சிக் கொண்டே இருந்தன. அவைகளும் கண்டு பிடித்தி தருவம் உங்களை சந்தோசமாய் வாழ வழி அமைத்து தருவோம் என சொல்லி சென்றன . ஆனால் அந்த அப்பாவி மான்களுக்கு வழி இன்னும் பிறக்கவே இல்லை.

எழுதியவர் : sarvaki (14-Mar-14, 10:41 am)
சேர்த்தது : sarvaki
பார்வை : 1142

மேலே