முதுமையின் புலம்பல்
வயதோ எழுபதடி!
மனமோ இருபதடி!
இருபதோ எழுபதை
அடக்க நினைக்குதடி !
எழுபதோ இருபதை
ஒடுக்கி வைக்குதடி!
தலைமுடியோ நரைத்ததடி!
இருந்தும்
காமமுடி நரைக்கலையடி!
கட்டியணைக்க கட்டில்துனை
நீயும் இல்லையடி !
கஞ்சீ வடித்து கொடுத்த
வஞ்சீ நீயும்
தூரதேசம் போனாய்
திரும்பி வரமாட்டாய் என்று
தெரிந்தும் கூட இந்த
கிழட்டு மனம் ஏங்குதடி!
உன் நினைவால் வாடுதடி
ஒண்டிக்கட்டை ஆனேனடி !
ஒடுங்கி நான் போனேனடி !
பத்துபிள்ளை பெற்றும் கூட
படுத்துக்கொள்ள இடமில்லையடி !
கொடுப்பதற்கு உன் பிள்ளைகளுக்கும்
மனமுமில்லையடி !
இதற்குத்தான் அப்போதே
சொன்னேனடி !
வீட்டை மட்டும்
நம் பெயரில்
எழுதி வைத்துக் கொள்ளலாமென்று
என் பேச்சு கேளாமல்
உன் பேச்சாய் திரிந்தாயடி!
சொத்துக்களையெல்லாம் உன்
தொப்புள்கொடி உறவுகளுக்கு
கொடுத்துவிட்டு உன்
கட்டில் உறவை தனியாக
நடுகாட்டில் விட்டாயடி!
சுடுகாடு சென்றாயடி!
வீதியே எனக்கு வீடானதடி!
பிளாட்பாரமே மெத்தையானதடி!
யாசிக்க மனமில்லையடி!
யோசிக்க இது நேரமுமில்லையடி!
தூயவளே!
தூரதேசம் சென்றவளே!
உந்தன் ஆசை முகம்
பார்க்க ....
நாதியத்து போன
இந்த கிழவன்
நல்லபடியா வருவேனா?-இல்லை
நாரிபோய்தான் வருவேனா?
வைகைமணி